கிறிஸ்தவர்களுக்கு கல்லறை தோட்டம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு அனைத்து இந்திய கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பின் சார்பில் நன்றி- பிஷப் மோகன்தாஸ்
கிறித்துவ மக்களின் நலன் காக்கவும் உரிமைகளை பாதுகாக்கவும் அனைத்து இந்திய கிறிஸ்துவ சபைகள் கூட்டமைப்பின் சார்பில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் சென்னை புரசைவாக்கம் டவுட்டன் ஒய். எம். சி .ஏ அரங்கத்தில் ஏ .ஐ .சி. சி .சியின் தலைவர் பிஷப் டாக்டர் மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த சிறப்பு ஆலோசனை கூட்டத்திற்கு 38 மாவட்டத்தில் இருந்து அனைத்து மாவட்ட பேராயர்கள் உயர் மட்ட குழு தலைவர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசுக்கு வலியுறுத்தும் வகையில் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த பிஷப் டாக்டர் .மோகன்தாஸ் கூறியதாவது :- கிறிஸ்தவ பெருமக்களுக்கு கல்லறை தோட்டம் அமைப்பதற்கும் தடையில்லா சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கும் தமிழக முதல்வருக்கு நன்றியை அனைத்து இந்திய கிறிஸ்துவ சபைகள் கூட்டமைப்பின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் . மேலும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக உள்ள திருச்சபைகளுக்கு பட்டா வழங்கிட வேண்டும். 30 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள பழுதடைந்த திருச்சபைகளுக்கு ரூபாய் 20 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரை நிதி அளிக்க வேண்டும் என்ன தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்தார்.
மேலும் இந்த சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் 38 மாவட்டத்திலிருந்து அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள் பேராயர்கள் உயர் மட்ட குழு தலைவர்கள் உள்ளிட்ட கிருத்துவ பெருமக்கள் உறுப்பினர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Red Mints
