எம்.ஜி.ஆர் பொறியியல் கல்லூரி விஞ்ஞானிகள் விவசாய பயன்பாட்டிற்கு கண்டுபிடித்த ட்ரோன்கள் அறிமுகம் .
சென்னை, மே -23, எம்.ஜி.ஆர் பொறியியல் கல்லூரியின் விண்வெளித் துறை மற்றும் பென்ஸ் டெக்னாலஜி நிறுவனமும் இணைந்து இந்த ட்ரோன்களை தயாரித்து அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னை எம்.ஜி.ஆர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைகழக வேந்தர் ஏ.சி.சண்முகம், தலைவர் ஏ.சி.எஸ் அருண்குமார், கல்லூரியின் விண்வெளித்துறை விஞ்ஞானிகள் பேராசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய எம் .ஜி .ஆர் பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் பேசியதாவது :-
எம்.ஜி.ஆர் பொறியியல் கல்லூரி விஞ்ஞானிகள் விவசாய பயன்பாட்டிற்கு ட்ரோன்களை கண்டுபிடித்து இந்திய விவசாயிகளுக்கு அர்ப்பணித்திருக்கிறார்கள் .இந்த ட்ரோன்கள் மூலம் பூச்சி மருந்து தெளிப்பான், விதை விதைத்தல், உரமிடுதல் என பல வகையான பயன்பாட்டிற்கு உகந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது .
15 ஏக்கருக்கு நெல் விதைக்க 30 நிமிட நேரமும் 10 ஏக்கருக்கு யூரியா தூவ 15 நிமிடமும் எடுத்து கொள்கிறது. இதனால் விவசாயிகளுக்கு கால விரையம் தவிர்க்கப்படுவதுடன் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையை வெகுவாக பூர்த்தி செய்கிறது என்றார்.
மேலும் இந்த ட்ரோன்கள் பாதுகாப்புத்துறை, வனத்துறை, மருத்துவத்துறை என அவைகளின் தேவைக்கேற்ப பயன்படுத்த முடியும் என்றார்.
இந்த ட்ரோன்களை இயக்குவதற்கு டி.ஜி.சி.ஏ பரிந்துரையின் படி நன்கு வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்துடன் ஒரு வார காலத்திற்கான பயிற்சி சான்றிதழ் வழங்கபடும். பாடத்திட்டத்தை பயிற்சி முடித்த பிறகு, பல்வேறு வகையான ட்ரோன்களை இயக்க தங்கள் விருப்பப்படி வேலைவாய்ப்பினை பெறலாம் என்று அவர் தெரிவித்தார்.
Red Mints
