பின்ணனி பாடகியும் நடிகையுமான ஆண்டியா சிறப்பு விருந்தினராக பங்கேற்பு.
சென்னை ஃபீனிக்ஸ் மாலில் “கின் லைவ் “இசை நிகழ்ச்சிக்கான செய்தியாளர் சந்திப்பு.
பின்ணனி பாடகியும் நடிகையுமான ஆண்டியா சிறப்பு விருந்தினராக பங்கேற்பு.
சென்னை, மார்ச், 18, சென்னையில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியில் நடக்கும் புத செய்திகளையும், நிகழ்வுகளையும் அறிந்துகொள்ள உதவுகிறது கின் (நோ யுவர் நெய்பர் வுட்) செயலி. அதன் சார்பில், மார்ச் 29, 2025 அன்று நந்தனம் ஓய்எம்சிஏ மைதானத்தில் கின் லைவ் என்ற பெயரில் ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சி நடக்க உள்ளது.
மக்களின் ஆவலையும், எதிர்பார்ப்பையும் அதிகம் தூண்டியிருக்கும் சென்னையின் மிகப்பெரிய இசை சங்கமம் நிகழ்ச்சியாக இது நடைபெறுகிறது. பிரபல பாடகர்களான பிரதீப் குமார், ஆண்ட்ரியா ஜெரேமியா, அசல் கோலார் மற்றும் பால் டப்பா உள்ளிட்ட பிரபல இசைக்கலைஞர்கள் இந்த இசை நிகழ்வில் பங்கேற்று பாடவிருக்கின்றனர்.
இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்ற சென்னை ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பத்திரிகையாளர் சந்திப்பில் சிறப்பு அழைப்பாளர்களாக
ஆண்ட்ரியா மற்றும் பால் டப்பா ஆகியோர் கலந்துகொண்டனர் .
பிரபல திரைப்பட பின்னணி பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியா பேசுகையில், “கின் லைவ்-ன் ஒரு அங்கமாக இடம்பெறுவதில் நான் பெரும் உற்சாகம் கொள்கிறேன். இந்தஇசை நிகழ்ச்சி ஒரு புத்தம் புதிய முயற்சி ஆகும். நான்கு வேறுபட்ட இசை வடிவங்களை, நான்கு வெவ்வேறு இசை கலைஞர்கள் ஒரே மேடையில் பாடுவது இதுவே முதன் முறையாகும். சென்னை மாநகரில் நடக்கும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பாடுவது இந்த அனுபவத்தை இன்னும் அதிக அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது. இந்த தனித்துவமான இசைப் பயணத்தை இசை ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களோடு பகிர்ந்து கொள்ள நான் ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று கூறினார்.
கின் வுட் டெக்னாலஜிஸ் நிறுவனர் காயத்ரி தியாகராஜன், “கின் என்பது, உள்ளூர் பகுதிகளில் நடக்கும் செய்திகள், நிகழ்வுகள், ஷாப்பிங், சலுகை திட்டங்கள் மற்றும் சமுதாய நிகழ்வுகள் என தங்களது பகுதிகளைச் சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களையும் மக்களுக்கு அளிக்கும் ஒரு முன்னணி செயலி ஆகும்.
நாங்கள் 2024 டிசம்பரில் ஈவண்ட் லிஸ்டிங்ஸ் என்கிற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தினோம், அதோடு இதுவரை 200-க்கும் மேற்பட்ட நேரடி நிகழ்வுகளை நாங்கள் நடத்தியுள்ளோம்.
கின் ஈவண்ட் லிஸ்டிங்ஸ்
மூலம் 15000-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. இதுவரை 600-க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், அதில் 65% உள்ளூர் நிகழ்வுகள் ஆகும்.
சென்னை மாநகரில் உள்ளூர் அளவில் வலுவான தொடர்புகளை ஏற்படுத்துவதில் “கின்”முன்னணியில் உள்ளது. இந்த அற்புதமான பயணத்தின் ஒரு பகுதியாக, சென்னையில் முதன்முறையாக “கின் லைவ் ” என்ற பெயரில் ஒரு தனித்துவமான இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
Red mints
