சென்னையில் தென்னாப்பிரிக்க சுற்றுலாவின் 21வது ரோட் ஷோ கண்காட்சி.
சென்னை,மார்ச் -21, உலக சுற்றுலா பயணத்திற்கான ஆர்வம் பெருகிவரும் இத்தருணத்தில் தென்னாப்பிரிக்காவின் சுற்றுலாத்துறையின் சார்பாக சென்னையில் 21வது ரோட் ஷோ கண்காட்சி நடைபெற்றது.
ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் மத்திய கிழக்கு, தென்னாப்பிரிக்க சுற்றுலாவிற்கான பிராந்திய பொது மேலாளர் கோபானி மான்கோட்டிவா தலைமையில், வணிக உறவுகளை வலுப்படுத்தவும், பயணிகளின் விருப்பங்களை மேம்படுத்தவும் ஒரு முக்கிய தளமாக ரோட் ஷோ கண்காட்சி நடத்தப்படுகிறது.
40 காண்காட்சியாளர்கள் காட்சிப்படுத்திய இந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட இந்திய பயண வர்த்தக முகவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் இது போன்ற ரோட் ஷோ கண்காட்சி மார்ச் 20 ஆம் முப்பையில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த
மான்கோட்டிவா, “குடும்பப் பயணிகள், சாகச விரும்பிகள் மற்றும் ஆடம்பர சுற்றுலாப் பயணிகளின் தென்னாப்பிரிக்க சுற்றுலாவிற்கு இந்தியா எப்போதுமே அதிக முன்னுரிமை அளிக்கும் சந்தையாக இருந்து வருகிறது.
இதில் குறிப்பாக தென்னாப்பிரிக்க சுற்றுலாவின் முக்கிய சந்தையாக சென்னை விளங்குகிறது. “2024 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவிற்குச் சென்ற 75,541 இந்திய சுற்றுலாப் பயணிகளில், 3.1% சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2024 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவிற்குச் சென்ற சென்னையைச் சேர்ந்த பயணிகளில் 22% ஷாப்பிங் செய்வதிலும் 15% இயற்கை இடங்கள் மற்றும் வனவிலங்கு சுற்றுலாவுக்கு
ஈர்க்கப்பட்டனர்.
இது சென்னை மக்களின் சுற்றுலா தனித்தன்மையை காட்டுகிறது. இந்த பயண அனுபவங்களை தொடர சென்னை மக்களை ஊக்குவிக்கவே இந்த ரோட் ஷோ கண்காட்சி நடத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
Red Mints
