தமிழ்நாடு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பாக 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம்
தமிழ்நாடு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பாக 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜ ரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொதுச்செயலாளார் கே.ஆர்.விஸ்வநாதன், மாநிலப் பொருளாளர் தேனி அமைதி மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் பணியாளர்கள் என 1000க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதில் தமிழ்நாடு நியாய விலை கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரை யாற்றினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது :- பொது விநியோகத் திட்டத்திற்கு என தனித்துறையை அமைத்திட வேண்டும். பொதுமக்கள் கருத்து கேட்டு பொருட்கள் வழங்குதல், சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்குதல் வேண்டும். டிஎன்சிஎஸ்சி எடைத்தராசும் அலுவலக கணினியும் இணைத்து ரசீது வழங்கிய பின்பு நியாய விலை கடையின் எடை தராசும் பி .ஓ. எஸ் விற்பனை நிலையத்துடன் இணைக்கப்பட வேண்டும் . திருச்சி மாவட்ட கூட்டுறவுத் துறையில் உள்ள பிரச்சனைகள் களையப்பட வேண்டும் இபிஎஃப் தொகையை இபிஃஎப் அலுவலகத்தில் செலுத்தப்பட வேண்டும் .
கட்டுப்பாடற்ற பொருட்களை கட்டுப்பாடு இல்லாமல் இறக்குவதை தடுத்தல் வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கை வலியுறுத்தி இங்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது தமிழக அரசு இதை கவனத்தில் கொண்டு அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
