ஆவின் மகளிர் நல சங்கம் சார்பாக மகளிர் தின கொண்டாட்டம்.
சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஆவின் மகளிர் நல சங்கம் சார்பில் 23 ஆம் ஆண்டு மகளிர் தின விழா மற்றும் நலிந்தோருக்கு உதவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது,
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆவின் நிர்வாக இயக்குனர் அண்ணாதுரை IAS, ஆவின் இணை நிர்வாக இயக்குனர் பொற்கொடி IAS, ஆவின் முதன்மை விழிப்புணர்வு அதிகாரி ராஜிவ் குமார் IPS, ஆவின் பொது மேலாளர் அமுதா, செயின்ட் தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பிரேமா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கினார்.
அதை தொடர்ந்து பார்வையற்றோர், ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு ஆடைகள், கல்வி உபகரணங்கள் மற்றும் உதவித் தொகை வழங்கபட்டது.
இதனை தொடர்ந்து ஆவின் மகளிர் நலசங்கத் தலைவர் ஆர் . சிவகாம சுந்தரி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
23 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டாடி வரும் இம்மகளிர் தின விழாவில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நலதிட்ட உதவிகளை செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இவ்வாண்டும் ஆவின் மகளிர் நல சங்கத்தின் வாயிலாக ஏழைப் பெண்களுக்கு சேலைகளும் கண் பார்வை இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகையாக காசோலையும் ஆவின் பெண் ஊழியர்களின் பெண் பிள்ளைகளில் 80 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு உதவித் தொகையும் பாராட்டு பரிசும் வழங்கி கெளரவிக்கப்பட்டது என்றார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் ஆவின் மகளிர் சங்கத் தலைவர் சிவகாம சுந்தரி, துணை த் தலைவர் டி.மாணிக்கவல்லி, பொதுச்செயலாளர் எம்.கல்பனா, பொருளாளர் ரேவதி, இணைப்பொருளாளர் ஏ. பிரசில்லா, இணைச்செயலாளர்கள் கே.தாட்சாயிணி , கே. லிட்டில் சுஜிதா, ஆர்.செல்வராணி உள்ளிட்ட சங்கத்தின் முக்கிய பொறுப்பாளர்கள், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என 500க்கும் மேற்பட்டோர் இந்த மகளிர் தின விழாவில் கலந்து கொண்டனர்.
