தமிழ்நாடு பட்டம் , பட்டயம் பெற்ற யோகா ஆசிரியர்கள் சங்கம் சார்பாக யோகா பயிற்சியாளர்கள்
தமிழ்நாடு ஆயூஷ் மையத்தின் மூலமாக மத்திய அரசு வழிகாட்டுதலோடு பிறப்பித்த ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண், பெண் என இருபாலர் பணியாற்றுகின்றனர். இவர்களில் ஆண்களுக்குரூ.8 ஆயிரம், பெண்களுக்கு ரூ.5,ஆயிரம் பகுதிநேர அடிப்படையில் ஊதியம் பெற்று வந்த நிலையில் ஒரு வருடத்திற்கு மேல் கடந்தும் சம்பளம் வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளனர்.
அது முறையே ரூ1லட்சம் ரூ.1.5 லட்சம் மேல் நிலுவைத் தொகை உள்ளது.
மேலும் எங்களது முக்கிய கோரிக்கையான யோகா ஆசிரியர்கள் பணி வேண்டியும், ஒருவருட கால நிலுவை சம்பளத்தை வழங்க கோரி போராட்டம். நடைபெற்றது.
https://youtu.be/Ohc-gSO9kxc?si=xmAtTNhy4eOxvlX3
இந்நிகழ்வில் சமூக சமூகத்திற்கான டாக்டர்கள் சங்கத் தலைமை நிர்வாகிகள் டாக்டர் . ரவீந்திரநாத் , டாக்டர். சாந்தி ,சித்தா மருத்துவ பேரியக்கம்
மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் விஜய் விக்ரமன் ,
மாற்று ஊடக மையம்
பேராசிரியர் காளீஸ்வரன்
புதிய தலைமுறை மக்கள் கட்சி கோபாலகிருஷ்ணன்
மக்கள் பாதை பேரியக்கம்
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்
நாகல்சாமி
மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதில் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க தலைவர் ஜி.ஆர். இரவிந்திரநாத் , தமிழ்நாடு பட்டம், பட்டயம் பெற்ற யோகா ஆசிரியர் சங்க பொதுச்செயலாளார் வே காசிநாதன் துறை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: ஓராண்டுக்கு மேலாக பணிபுரிந்த நிலுவைத் தொகை வழங்கக் கோரியும் பணி நிரந்தரம் வழங்கிட வலியுறுத்தி அரசிடம் கேட்டுக்கொண்டனர் மேலும் எங்களுடைய கோரிக்கையை ஏற்று அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்படி தவிர்க்கும் பட்சத்தில் மாநில முழுவதும் உள்ள யோகா பயிற்சியாளர்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தக்கூடும் என தெரிவித்தனர்.
