ஜெமினி எடிபல்ஸ் & ஃபேட்ஸ் இந்தியா (ஜெஃப் ) மற்றும் ஸ்ரீ அன்னபூர்ணா ஃபுட்ஸ் இணைந்து கூட்டு வர்த்தகம் .
சென்னை, மார்ச் – 05, அகில இந்திய அளவில் 21.7 சதவீத சந்தை பங்கினை கொண்டு இந்தியாவின் முதன்மை சன்பிளவர் ஆயில் நிறுவனமாக திகழும் ஜெமினி எடிபில்ஸ் & ஃபேட்ஸ் இந்தியா லிமிடெட் மற்றும் இந்நாட்டின் தொன்மையான மசாலா தயாரிப்பு பிராண்டுகளில் ஒன்றான கோவையை தலைமையிடமாக கொண்ட ஸ்ரீஅன்னபூர்ணா ஃபுட்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் ஒன்றிணைந்து ஜெஃப் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற கூட்டு முயற்சி நிறுவன உருவாக்கி இருக்கின்றன .https://youtu.be/nhWTSCYz_Z4?si=0Mvv9CSo-Ii0e7IP
மசாலா தயாரிப்புகள் மீல் மிக்ஸ் மற்றும் தொடர்புடைய இன்னும் பல தயாரிப்பு பொருட்களை தயாரித்து விநியோகிப்பது இக்கூட்டு முயற்சி நோக்கமாகும் .
கடந்த பல ஆண்டுகளாக இத்தொழில் துறையில் இயங்கி வரும் ஸ்ரீஅன்னபூர்ணா பொருட்களின் துல்லியமான சுவைகளின் சாரத்தை தன் கைவசப்படுத்தி நாடெங்கிலும் வீட்டில் சமைக்கப்படும் உணவின் பாரம்பரிய சுவையை உறுதி செய்து வருகிறது.
ஸ்ரீ அன்னபூர்ணா புட்ஸ் நிர்வாக பங்குதாரர் மற்றும் ஜெஃப் தலைமை செயலாக்க அதிகாரியுமான விஜய் பிரசாத் இக்கூட்டு முயற்சி குறித்து பேசியதாவது:-
நுகர்வோருக்கு ஆரோக்கியமான மற்றும் சுவையான மசாலா பொருட்களை வழங்கும் குறிக்கோளோடு ஜெஃப் ஃபுட்ஸ் இந்திய நிறுவனத்துடன் கூட்டு வணிகத்தில் ஈடுபடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் .
மசாலாக்கள் முன்னோடி என புகழ் பெற்றிருக்கும் நாங்கள் மிக சிறந்த தாயாரிப்புகளை தொடர்ந்து வழங்குவோம் . ஜெஃப் இந்தியாவின் வலுவான வினியோக வலை அமைப்பின் ஆதரவோடு அன்னபூர்ணா மசாலாக்கள் இனி இந்தியாவிலும் விரைவில் கிடைக்கப்பெறும் . தொழிற் கலாச்சாரம் வளர்ந்து வருகின்ற நிலையில் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வும் மின்னணு வர்த்தக தளங்களில் ஆதிக்கம் அதிகரித்து வரும் கால கட்டத்தில் ஆர்கானிக் மற்றும் பிரிமியம் மசாலா பொருட்களுக்கான தேவை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தரமான மூலப் பொருட்களை கொள்முதல் செய்வது மற்றும் சூழல் தோழமைக் கொண்ட பேக்கேஜிங் நடுவில் மீது கவனம் செலுத்துவதன் மூலம் இந்த நற்பெயரை இன்னும் நாங்கள் குழுவாக கட்டமைக்க விரும்புகிறோம் என்றார்.
Red mint
