ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் பத்தாண்டுக்கு முன்பே ரூ.5 லட்சம் மதிப்பிலான மசாஜ் செய்யும் டேபிள், தொக்கண அறை மற்றும் பல்வேறு கருவிகள் வழங்கப்பட்டன. ஆனால் அவைகளை பயன்படுத்த ஆளில்லை – குமுறும் ஆய்ஷ் பிசியோதெரபி நர்ஸ்கள்
https://youtu.be/cIw1y2yvTKE?si=mCyu_hbi1OLDO16u
சென்னை, திருநெல்வேலி சித்த மருத்துவ கல்லுாரிகளில் மட்டும் ‘ஆயுஷ்’ நர்சிங் பயிற்சி எனப்படும் பிசியோதெரபி கல்வி அளிக்கப்படுகிறது.
இப் பயிற்சியினை பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு இதுவரை உருவாக்கப்படவில்லை.
இன்றுவரை ஆண்டுக்கு 50 முதல் 200 பேர் பயிற்சி பெறுகின்றனர். முதலாண்டு படிப்பு, அடுத்த ஒன்றரை ஆண்டுகள் ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஹோமியோபதி, யோகா பிரிவு மருத்துவமனைகளில் செய்முறை பயிற்சி பெறுகின்றனர்.
அலோபதி மருத்துவத்திற்கான நர்ஸ்களைப் போலவே இவர்களும் ‘ஆயுஷ்’ துறையின் கீழ் ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஹோமியோபதி மருத்துவ மனைகளில் வேலைவாய்ப்பு பெறலாம்.
தனியார் மருத்துவமனைகளில் தேவை அதிகமாக உள்ளதால் பயிற்சி பெறாதவர்களை வேலைக்கு எடுக்கின்றனர் அல்லது கேரளாவில் இருந்து வரவழைக்கின்றனர்.
சென்னையில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் சித்தா இளநிலை டாக்டர் படிப்புக்கான சேர்க்கை அனுமதிக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டும் தினமும் 4000 பேர் சிகிச்சை பெற வருகின்றனர். இங்கும் நர்சிங் படிப்புக்கான சேர்க்கையை கொண்டு வரவேண்டும்.டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தாலும் சிகிச்சை அளிப்பது நர்ஸ்கள் தான்.
2009 முதல் நர்சிங் பயிற்சியை அனுமதித்து விட்டு பணியிடங்களை தமிழக அரசு புதிதாக உருவாக்கவில்லை.
தமிழகத்தில் 400 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.இதில் பெரும்பாலானவற்றில் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் பத்தாண்டுக்கு முன்பே ரூ.5 லட்சம் மதிப்பிலான மசாஜ் செய்யும் டேபிள், தொக்கண அறை மற்றும் பல்வேறு கருவிகள் வழங்கப்பட்டன. ஆனால் அவைகளை பயன்படுத்த ஆளில்லை.
டாக்டர் பரிசோதனை செய்து பார்மசிஸ்ட் மருந்துகளை வழங்குகின்றனர்.
நர்சிங் பயிற்சி பெற்றவர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு எண்ணெய் மசாஜ் செய்வதோ, தொக்கணம் செய்வதோ முடியாது. நோயாளிகளுக்கு முழுமையான சேவை வழங்க வேண்டுமெனில் நர்ஸ்களின் தேவை அவசியம்.ஏற்கனவே பயிற்சி பெற்ற 2000க்கும் அதிகமானோர் தற்போது வரை வேலை கிடைக்காமல் உள்ளனர்.
இது குறித்து பல முறை மேலிடத்தில் முறையிட்டும் கவனம் பெறாததால் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்..!
“
