அரசமைப்புச் சட்டப்பிரிவு 16 (4ஏ) வை நடைமுறைப்படுத்த வேண்டி தமிழக அரசை வலியுறுத்தி ஆர்பாட்டம்.
சென்னை , மார்ச்- 04 ,
தமிழ்நாடு மாநில அரசு பணிகளில் எஸ்.சி , எஸ்.டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கிட அரசமைப்புச் சட்டப்பிரிவு 16 (4ஏ) வை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு அனைத்து துறை எஸ்.சி,எஸ்.டி பணியாளர்கள் கூட்டமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளரை சந்தித்த தமிழ்நாடு அரசு எஸ்.சி, எஸ்.டி அலுவலர், ஆசிரியர் சங்கத் தலைவர் எம் .குமார் தெரிவித்ததாவது:-
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 74வது திருத்தத்தின் 16 (4 ஏ) படி 1995 ஆம் ஆண்டிலிருந்து எஸ்.சி எஸ்.டி பிரிவினருக்கு அனைத்து துறைகளிலும் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீட்டை வழங்கவில்லை. அதை உடனே அமல்படுத்த வேண்டும்
இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசு கொள்கை சார்ந்தது.
தமிழ்நாடு அரசு சமூகநீதி கொள்கையை கடைப்பிடிப்பது என்பதால் சமூகநீதியில் அடித்தள சமூக நீதிக்காக இருக்கின்ற எஸ்.சி, எஸ்.டி பதவி உயர்வில் இட ஒதுக்கிடை வருகின்ற 16 (4 ஏ ) உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
முதலமைச்சர் பதவியேற்ற பின் 10 ஆயிரம் பின்னடைவு ஊழியர்களுக்கு அரசாணை வழங்கப்படும் என்று தெரிவித்தார் . ஆனால் மூன்றாண்டுகள் கடந்தும் அது இன்னும் வழங்கப்படவில்லை
பத்தாண்டுகளுக்கு முன்பாக வழங்க வேண்டிய எஸ்.சி, எஸ்.டி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை இன்னும் வழங்கப்படவில்லை.
குரூப் -டி இல் எஸ்.சி, எஸ் .டி பிரிவுகள் அதிகமாக வேலை வாய்ப்பு பெற்று வந்தார்கள் . அதை தனியார் மயமான பிறகு தற்போது அவர்கள் ஒப்பந்த பணிகளாக பணியாளர்களாக மாறிவிட்டனர் . அவர்களை உழைப்பு சுரண்டப்படுகிறது .சமூகத்தில் அவர்களை மேலும் பின்னுக்கு தள்ளப்பட்டு சமத்துவமின்றி பாதிக்கப்படுகிறார்கள்.
ஆகவே அந்த குரூப் டி பணியிடங்களை மீண்டும் அரசு பணியாக மாற்ற வேண்டும்.
கடந்த 40 ஆண்டுகளாக எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு உயர்த்தவில்லை . தற்போது 19% மட்டுமே நடைமுறையில் உள்ளது . அதை 2011 மக்கள்தொகை அடிப்படையில் 24% உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றோம் என்றார்.
Red mints
