எஸ்.ஆர்.எம் வேந்தர் பாரிவேந்தருக்கு ஐ.சி.டி கெளரவ பெல்லோஷிப் விருது
சென்னை, பிப் – 25,
எஸ்.ஆர்.எம் வேந்தர் பாரிவேந்தருக்கு ஐ.சி.டி கெளரவ பெல்லோஷிப் விருது
வழங்குகிறது
சர்வதேச பல் மருத்துவக் கல்லூரி (ஐசிடி பிரிவு VI )( இந்தியா, இலங்கை மற்றும் நேபாளம் ) டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தருக்கு மதிப்புமிக்க கௌரவ பெல்லோஷிப்பை வழங்கியுள்ளது.
இது பல் மருத்துவர், மருத்துவம் அல்லாதவர்களுக்கு அரிதாக வழங்கப்படும் இந்த கௌரவமானது கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரித்து வழங்கப்பட்டது.
இந்த கௌரவ பெல்லோஷிப்பை ஐ.சி.டி-யின் உலகளாவிய தலைவர் டாக்டர் இயன் எம். டாய்ல் மற்றும் ஐ.சி.டி பிரிவு VI – ன் தலைவர் டாக்டர் மீரா வர்மா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விருதினை வழங்கினர்.
எஸ்.ஆர். எம் வேந்தர் பாரிவேந்தர்
தனது ஏற்புரையில், பல் மருத்துவத்தின் தனித்துவமான முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் .
தனிநபர்கள் நிமிர்ந்து நடக்கவும், தெளிவாகப் பேசவும், தன்னம்பிக்கையுடன் சிரிக்கவும் உதவுவதில் இத்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது என்று கூறினார்.
மருத்துவம் சாராதவருக்கு இத்தகைய மதிப்புமிக்க அங்கீகாரத்துடன் கெளரவித்த ஐ.சி.டி.க்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். தாழ்த்தப்பட்டோருக்கு இலவசமாக பல் சிகிச்சை அளிக்கப்படும் எஸ்ஆர்எம் காட்டாங்குளத்தூர் பல் மருத்துவக் கல்லூரியில் மனிதாபிமானப் பணிகளை அவர் வலியுறுத்தினார். “நாங்கள் ஏழைகளுக்கு மருத்துவம் மட்டும் தருகிறோம் என்றில்லாமல்
அவர்களை சிரிக்க வைத்து அழகு படுத்துகிறோம். ஏழைகளுக்கு சேவை செய்வது உண்மையிலேயே கடவுளுக்குச் செய்யும் சேவையாகும்,” என்று அவர் கூறினார்.
