செந்தமிழ் ஆகம பாசுரங்கள்
பாடி தேனாம்பேட்டை திடீர் வினாயகர் ஆலய திருகுடமுழுக்கு நன்னீராட்டு விழா.
சென்னை, பிப்-20,
சென்னை தேனாம்பேட்டை ஆலையம்மன் கோயில் தெரு வில் அமைந்துள்ள அருள்மிகு திடீர் விநாயகர் ஆலய திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது. இந்த ஆலயத்தின் நன்னீராட்டு விழா செந்தமிழ் ஆகம விதிகளின் படி ஆசான் சிவத்திரு .உமாபதி , மற்றும் திருமுறை இசைமணி வள்ளி உமாபதி ஆகியோர் செந்தமிழ் பாசுரங்களை பாடினர். உடன் 20 வருடங்கள் கிருபானந்த வாரியார் உடன் இருந்த சிவத்திரு கிருபாகரன் , சிவ திரு.முத்தையன், சச்சிதானந்தன் ஆகியோரின் ஆசியுடனும் இந்த நன்னீராட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இது குறித்து செந்தமிழ் ஆகம முத்தையா தெரிவித்ததாவது:-
தேனாம்பேட்டை ஆலையம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு திடீர் விநாயகர் ஆலயம் 38 ஆண்டுகள் பழைமை வாய்ந்த, தினமும் பக்தர்கள் வழிபாடக்கூடிய தலமாகும். ஆனாலும் இந்த ஆண்டுதான் ஆலயத்திற்கு முதல் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த ஆலயத்தின் நன்னீராட்டு விழாவின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் செந்தமிழ் ஆகம விதிகளின் படி ஒதுவார்களால் பாசுரங்கள் பாடப்பட்டு குடமுழுக்கு நிகழ்ச்சி நடைபெற்றது .
செந்தமிழில் பக்தி பாசுரங்கள் பொதுமக்கள் அனைவரும் மிக எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம் இந்நிகழ்ச்சிஅமைந்தது என்று அவர் தெரிவித்தார்.

