தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம்.
தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நல சங்கம் (சுழற்சி- I, II ) சார்பாக சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில தலைவர் பி .செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் எஸ். வசந்தகுமார் , மாநில பொதுச் செயலாளர் கே .அருணகிரி, மாநில துணைப்பொது செயலாளர் எச். புவனேஸ்வரி பொருளாளர் எஸ். பவானி மற்றும் உள்ளிட்ட 1800க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் இதில் கலந்து கொண்டனர் .மேலும் செய்தியாளர்களிடம் மாநில நிர்வாகிகள் கூறியதாவது : – கடந்த 25 ஆண்டுகளாக கல்லூரி விரிவுரையாளர்கள் பணியில் இருக்கிறோம் . திமுக ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதியிலும் பணிநிரந்தரம் செய்வோம் என்று கூறிவிட்டு அதற்கான முயற்சியை எடுக்காமல் அலைகழிக்கிறது.
எங்களின் கோரிக்கைகளான பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, காப்பீடு திட்டம், மகப்பேறு விடுப்பு, பணி பாதுகாப்பு ஆகிய 5 அம்ச கோரிக்கைகள் மையப்படுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு இந்த பெருந்திறள் ஆர்பாட்டம் நடத்துகிறோம் என்று தெரிவித்தனர்.
